வினோதம் 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
![]() |
Kuva Kuva Paati |
குஜராத் மாநிலத்தில் முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கட்ச் மாவட்டத்தை சேர்ந்த, பிரவீன் - சுசீலா, 60, தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தையில்லை.
இந்நிலையில், அவர்களது கிராமத்தை சேர்ந்த, 60 வயது பெண் ஒருவர், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றதை அறிந்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்றனர்.
சுசீலா தம்பதியை பரிசோதித்த டாக்டர்கள், சுசீலாவுக்கு மாத விலக்கு சுழற்சி மீண்டும் வருவதற்கான சிகிச்சையளித்தனர். பின், அவருக்கு செயற்கை கருவூட்டல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் முறை, இரண்டு கரு உருவாகி, சில மாதங்களில் கலைந்துவிட்டது.
இரண்டாவது முறை கருத்தரித்த சுசீலாவுக்கு, அறுவை சிகிச்சை மூலம், அழகான பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து சுசீலாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தாமினி கூறியதாவது:
ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட சுசீலா, வயது காரணமாக, கர்ப்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். எட்டாவது மாதம் முடிந்த பின், அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கவும் -பிளிப்கார்ட்டில் சோனி Xperia வின் அதிரடி விலை குறைப்பு அதிர்ச்சியில் அமேசான்
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை: