ஜிஎஸ்டி (GST) எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
![]() |
Goods Service Tax GST Tamil |
Gst pdf gst tax rate gst benefits gst in tamil gst explained gst in india gst rate in india gst wiki,
ஜூலை 1 ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை, எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று (மே 18) நடந்தது. இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 81 சதவீதம் பொருட்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது. அரிசி, பருப்பு, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்க அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விலை குறையும் பொருட்கள் : கூந்தல் எண்ணெய், சோப்கள், டூத்பேஸ்ட் உள்ளிட்டவைகள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. மின் உற்பத்திக்கு பயன்படும் நிலக்கரி மீதான வரி 11.69 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மீதான வரி 31-32 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. டீ, காபி ரகங்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது.
வரி, விலை அதிகரிக்கும் பொருட்கள் : 350 சிசி திறன் கொண்ட பைக்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. சொகுசு வாகனங்களுக்கு கூடுதலாக 15 சதவீதம் வரியும், சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வரியும், சிறிய ரக டீசல் கார்களுக்கு 3 சதவீதம் வரியும் விதிக்கப்பட உள்ளது.
தங்கம், பிஸ்கெட்கள், பிராண்டட் பருப்புக்கள், காலணிகள், பீடி, டெக்ஸ்டெய்ல்ஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி குறித்து, 2 வது நாளாக நடக்கும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. மேலும் ஜிஎஸ்டி.,ல் இருந்து விலக்கு பெறும் பொருட்கள் குறித்தும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க - தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை இழந்துவிட்டது.
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை: