டிகிரி முடித்தால் போதும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை 1500 காலியிடங்கள்

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 1500 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


Union Bank Job Vacancies
Union Bank Job Vacancies

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் (UBI), உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உள்ளூர் வங்கி அதிகாரி- 1500.

கல்வி தகுதி என்ன?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலை.,யில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு.

விண்ணப்பிக்க, 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்.

விண்ணப்ப கட்டணம் ரூ.850. எஸ்.சி., எஸ்.டி, மற்றும் PwBD பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ. 175.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

Union Bank Job Offers
Union Bank Job Offers

முக்கியமான தேதிகள்

அக்டோபர் 24 முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 13.

தேர்வு மையங்கள் 

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோயில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

மாத ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை மாதம் சம்பளம் கிடைக்கும்.




மேலும் படிக்க -
 

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க ! 

Tamil Nadu Cooperative Societies Recruitment 2024 ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் - 10,12-ம் வகுப்பு போதும் முழு விவரம் Tamilnadu Ration Shop Jobs

மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது இணையதளத்தில் இணைந்து கொள்ளவும் மேலும் உங்கள்  நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவினை ஷேர் செய்யவும்...

Tags- union bank job vacancies * union bank recruitment * union bank careers * union bank jobs * bank jobs in india * union bank india jobs  union bank recruitment 2024 * union bank fresher jobs * union bank experienced jobs * union bank officer jobs * union bank clerk jobs * union bank PO jobs * union bank online application * union bank job portal how to apply for union bank jobs * latest union bank job openings * union bank job vacancies for freshers * union bank job vacancies for experienced * union bank job vacancies in delhi * union bank job vacancies in mumbai * union bank job vacancies in kolkata * union bank job vacancies in chennai * union bank job vacancies in bangalore , UBI Bank Job Vacancies

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.