முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் எப்படி இணைவது விண்ணப்பம் எங்கே கிடைக்கும் எப்படி பதிவு செய்வது வாங்க பார்க்கலாம்

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் எந்த ஒரு கட்டணமும் செலுத்தாத வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு திட்டம் என்று புதிய திட்டம் தொடங்கப்பட்டது...  

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

பிறகு அந்த திட்டமானது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance)கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது...

 கீழே உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உங்கள் கிராமம் அல்லது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று உங்கள் பகுதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைப்படம் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்,,, 

நீங்கள் சமர்ப்பித்த இரண்டு நாட்களில் உங்கள் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை ரெடி ஆகிவிடும்... 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு என்னென்ன சான்றுகள் தேவை என கீழே பார்க்கலாம்  

  • குடும்ப அட்டை, 
  • குடும்ப அசல் வருமானச் சான்று, 
  • ஆதார் அட்டை .

உங்கள் அருகில் உள்ள இ சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் பிறகு தாங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களை சரி பார்த்து குடும்பத் தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்...

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்

TN Chief Minister Comprehensive Health Insurance Scheme (CMCHIS) 2024 Application Form PDF

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான கட்டணம்

இது இலவசச் சேவையாகும், எனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது.

Job VacancyTamil Nadu Cooperative Societies Recruitment 2024 ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் - 10,12-ம் வகுப்பு போதும் முழு விவரம் Tamilnadu Ration Shop Jobs

2 கருத்துகள்:

Blogger இயக்குவது.