தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை இழந்துவிட்டது


கியா நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட தமிழக அரசியல்வாதிகள்... தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால்தான், கியா கார் நிறுவனம் தமிழகத்தை புறந்தள்ளிவிட்டு ஆந்திராவுக்கு போய்விட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால்தான், கியா கார் நிறுவனம் தமிழகத்தை புறந்தள்ளிவிட்டு ஆந்திராவுக்கு போய்விட்டதாக தொழிலதிபர் கண்ணன் ராமசாமி குற்றம் சாட்டி இருக்கிறார்.

தென்கொரியாவை சேர்ந்த கியா கார் நிறுவனம் ஆந்திராவில் புதிய கார் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. அண்மையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது
இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் தமிழகத்தில்தான் கார் ஆலை அமைக்க திட்டமிட்டது. சென்னையில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் கார் ஆலைக்கு அருகாமையிலேயே இந்த புதிய கார் ஆலை அமைக்கவும் திட்டமிட்டது


இதனால், உதிரிபாகங்களை சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கு ஏதுவான சூழல் ஏற்படும் என்பது அந்த நிறுவனத்தின் கணக்கு. மறுபுறத்தில் இந்த புதிய கார் ஆலை மூலமாக தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.7,000 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்திருக்கும்.
ஆனால், தமிழகத்தை கியா மோட்டார்ஸ் புறந்தள்ளியதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனமான செயல்பட்ட இன்ஃப்ராடெக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் ராமசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.அதில்," தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் கார் ஆலை அமைப்பதற்கான ஆலோசகராக செயல்பட்டோம். தமிழகத்தை முதல் தேர்வாகவும், குஜராத் மற்றும் ஆந்திராவை அடுத்தடுத்த சாய்ஸாகவும் பரிந்துரை செய்திருந்தோம்தமிழகத்தில்தான் கார் ஆலை அமைக்க கியா நிறுவனம் விரும்பியது. ஒரகடம் சிப்காட் பகுதியில் தேவையான நிலமும் இருந்தது. ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள் நிலத்தின் மதிப்பைவிட 50 சதவீதத்திற்கு மேல் லஞ்சமாக கேட்டனர். இதனால், கியா நிறுவனம் அதிர்ச்சி அடைந்து வேறு வழியில்லால் தமிழகத்தை விட்டுவிட்டு ஆந்திராவை தேர்வு செய்தது




.ஆந்திராவில் கார் நிறுவனம் அமைப்பதற்கான அனைத்து வசதிகளையும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்து கொடுத்தார். கியா கார் நிறுவனத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் இரண்டு ஆண்டுகளாக நாங்கள் உழைத்தோம். அதற்கு பலனில்லாமல் போய்விட்டது

இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும். எனக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியில் விருப்பம் இல்லை. ஆனால், தற்போதைய சூழலில் சில காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தி தமிழகத்தை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.,தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை இழந்துவிட்டது. அத்துடன், ஏராளமான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். நான் தலைகுனிந்து நிற்கிறேன். கடவுள்தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்," இவ்வாறு அந்த பதிவில் கூறி இருக்கிறார். ஏற்கனவே, தமிழகத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழல்களால் முதலீடுகள் பறிபோய் வருவதாக கூறி இருந்தோம். இந்த நிலையில், தற்போது கண்ணன் ராமசாமி கூறியுள்ள தகவல்கள் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால், லஞ்சம் கேட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் குறித்த விபரத்தை அவர் வெளியிடவில்லை. ஆனால், நிச்சயம் இது தமிழக ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தரும் விஷயமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.